கோவையில் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய நபர்...!

பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள பள்ளியில் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்ட போது, 15 மாணவிகள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மளிகை கடைக்காரர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் நடராஜன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடராஜன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து, சிறுமிகளிடம் ஆபாசமாக தொட்டு பேசுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அவரது பாலியல் அத்துமீறல்களை வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி வீட்டில் சொல்லாமலே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகள் படித்து வரும் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தியுள்ளார்.

அப்போது மாணவிகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' குறித்தும், பாலியல் அத்துமீறல் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். மேலும், அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடமும் கருத்து கேட்டு, அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.

அப்போது கடைக்காரரின் தொல்லையை சொல்வதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதிய 13 வயது மாணவி ஒருவர் பேசுவதற்கு எழுந்தார். தலைமை ஆசிரியையிடம், பேசிய மாணவி, அவர் வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

அவர் மட்டுமல்லாமல் அங்கு படிக்கும் மேலும் 14 மாணவிகள் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை, உடனடியாக சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.



அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மளிகை கடைக்காரரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து நடராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தானா? எத்தனை பேர் அவரால் பாதிக்கப்பட்டனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...