தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கைகள் எங்கே..? திமுக அரசின் அலட்சியமே காரணம் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அனைத்து வார்டுகள், ஊரகப் பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் அவசர மருத்துவ முகாம்களை நடத்த அரசு உடனையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் குறிப்பாக பள்ளிச் செல்லும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, போதுமான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இருப்பில் உள்ளது என்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப கூடாது என்று சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேகமாக பரவிவரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அழைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் பரவும் காய்ச்சலுக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்றும் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் குறிப்பாக பள்ளிச் செல்லும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மருத்துவமனைகள் குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதிகளை கண்டறிவதற்கு சோதனைகள் நடத்தப்படவில்லை. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தான் கட்டுக்கடங்காமல் காய்ச்சல் பரவி வருகிறது.

குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள, இந்த காய்ச்சல்கள் பரவ கொசுத் தொல்லையே முக்கிய காரணம். மழைநீர் வடிகால் சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி என்ற பெயரில், தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில், கால்வாய்கள் தோண்டப்பட்டு, பல மாதங்களாகவே பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால், தெருக்களில் நடக்க முடியாமலும், சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாமலும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றன. இது ஒரு பக்கம் என்றால், கழிவுநீர் கால்வாய்களும், கழிவுநீர் கால்வாயாக அரசாங்கத்தாலேயே மாற்றப்பட்டு விட்ட, மழைநீர் வடிகால்களும் திறந்த நிலையில் இருப்பதால் கொசுத் தொல்லை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனால், இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகலிலும் கொசுக்கடியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுவே பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரவக் காரணம்.

மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் பல மாதங்களாக முடிக்கப்படாமல் இருப்பதற்கு, திமு.க. அரசின் அலட்சியமும், செயல்பாடற்ற தன்மையுமே காரணம். பெரும் வாய்ப் பேச்சிலேயே 14 மாதங்களை கடந்து விட்ட தி.மு.க. ஆட்சியில் இன்னும் என்னென்ன துயரங்களை அனுபவிக்க போகிறோமோ தெரியவில்லை.

எனவே, மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் பணிகளை உடனடியாக முடித்து, மக்களை குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வகையான காய்ச்சல்கள் பரவி வருவதை தடுக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நாட்டின் செல்வங்களான குழந்தைகளை பாதுகாக்க, தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில், பரவிவரும் காய்ச்சல்கள் குறித்தும், காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அனைத்து வார்டுகள், ஊரகப் பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் அவசர மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...