கோவை பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 35 லட்சம் மதிப்பிலான உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ள தன்னார்வ அமைப்பு...!

கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் -323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையை அடுத்த பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்ககு ரவுண்ட் டேபிள் இந்தியா (ஆர்.டி.ஐ) அமைப்பு சார்பாக 35 லட்சம் மதிப்பிலான உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி வழங்கியுள்ளது.

ப்ராஜெக்ட் ஹீல் (உடல்நல மேம்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை) என்ற ஆர்.டி.ஐ இன் முயற்சியின் கீழ், கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள்-323 அமைப்பு சார்பாக பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.



உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய தலைவர் டேபுலர். மனிஷ் லகோடியா மற்றும் தலைவர் நிரவ் கெனியா ஸ்பார்க் 323 மற்றும் டேபுலர்.குனால் சங்கனி- ஐபிசி ஸ்பார்க் 323 ஆகியோர் திறந்து வைத்தனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா, "ஜி.என் குழுமத்தின் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் இந்த முயற்சி சாத்தியமானது. ரவுண்ட் டேபிள் இந்தியாவின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் எங்கள் பங்களிப்பை தருவோம் என உறுதியளித்தனர்."

பூலுவம்பட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் ஏற்படுத்தி கொடுத்தது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள் என்று சுகாதார துணை இயக்குநரும் டாக்டர் அருணா மற்றும் உள் நோயாளிகள் பிரிவின் மருத்துவ அலுவலருமான கனகராணி தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா 323 தலைவர் டேபுலர். நிரவ் கெனியா, மற்றும் ஆர்.டி.ஐ நிர்வாகிகள் , மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...