குன்னூர் மலை ரயிலை மறித்த கொம்பன் யானை - பீதியடைந்த மக்கள்: பரபரப்பு..!

குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகே தண்டவாளத்தில் திடீரென வழிமறித்து நின்ற கொம்பன் யானையால் பயணிகளிடையே பரபரப்பான சூழல் நிலவியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை ரயிலை கொம்பன் யானை திடீரென மறித்து நின்றதால், மலை ரயிலில் வந்த பயணிகள் பீதியடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 3:20 மணிக்கு குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலை 12-வது குகை அருகேயுள்ள தண்டவாளத்தில் கொம்பன் யானை திடீரென வழிமறித்து நின்றது.

இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக மலை ரயில் நகராமல் நின்றதால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர். மேலும் சிலர் ரயிலை மறித்து நின்ற யானையை தங்கள் செல்போன்களில் 'வீடியோ' எடுத்தனர்.

இந்நிலையில், கொம்பன் யானை வனப்பகுதிக்குள் சென்றதும் மலை ரயில் மேட்டுப்பாளையம் சென்றது. இந்த சம்பவம் காரணமாக பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...