பொள்ளாச்சி அருகே சடலமாக கிடந்த ஆண் காட்டு யானை - உடற்கூறு ஆய்வு செய்து 2 தந்தங்களை மீட்ட வனத்துறை..!

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேத்துமடை கிழக்கு பிரிவில் உள்ள பச்சத்தண்ணி சரக பகுதியில் உள்ள ஓடையில் 40 வயது மிதக்கதக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில், கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் நேற்றைய தினம் (15.09.2022) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேத்துமடை கிழக்கு பிரிவில் உள்ள பச்சத்தண்ணி சரக பகுதியில் உள்ள ஓடையில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில், கண்டறியப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர், ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர் செல்வம் மற்றும், தன்னார்வலர்கள் முன்னிலையில், இன்று வனக் கால்நடை மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் கால்நடை மருத்துவர் கோவிந்தராஜ், உள்ளிட்ட குழுவினர் மூலம் இறந்த காட்டு யானைக்கு உடலை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில், ஆண் காட்டு யானை இயற்கையாக இறந்து இருக்கலாம் என்றும், ஆண் காட்டு யானையின் வயது சுமார் 40 ஆக இருக்கலாம் என்றும் மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டது, மேலும் இறந்த ஆண் யானையின் உடலிலிருந்து ஒரு ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...