முதல்வரின் "காலை சிற்றுண்டி" திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாநகராட்சி பள்ளியில் துவங்கி வைத்தார்.

காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.


கோவை: முதல்வரின் "காலை சிற்றுண்டி" திட்டத்தைஅமைச்சர் செந்தில் பாலாஜி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று துவங்கி வைத்தார்.



திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, அண்ணா அறிஞரின் 114 வது நாளான நேற்றைய தினம் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் துவங்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு அன்பாக உணவை ஊட்டி விட்டு அனர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி, கோவை ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் நெந்தில் பாலாஜி துவங்கி வைத்தார்.



காலை சிற்றுண்டிதிட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 62 ஆரம்ப பள்ளிகளில் பயிலும் 7,255 மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அதே போல், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 9 பள்ளிகளில் பயின்று வரும் 1,119 மாணவர்களுக்கும், மதுக்கரை நகராட்சியில் உள்ள 3 பள்ளிகளில் 730 மாணவர்களுக்கும் இன்று முதல் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின் கீழ், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரிசி உப்புமா, ரவா உப்புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல் சோள காய்கறி கிச்சடி, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா கிச்சடி போன்ற உணவு வகைகள் மாறி மாறி வழங்கப்படும் என்றும் வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூா் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி தயாா் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம் மூலம் ஏழைமாணவர்களின் கற்றல் திறன், ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்டு,பசியின்மை நீங்கி மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம்செலுத்த முடியும் என்பதேஅனைவரின் ஒரு மித்த கருத்தாக உள்ளது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...