ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை - ரூ.2.42 கோடி அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம் ஆகிய இருவரும் முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2.42 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ரவி தீர்ப்பளித்தார்.


கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் இருவருக்கு தலா பத்தாண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த கோவை நீதிமன்றம், ரூ.2.42 கோடி அபராதமும் விதித்துதீர்ப்பளித்ததுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம். இவர்கள் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக கவர்ச்சியான விளம்பரங்களையும், முதலீடு திட்டங்களையும் அறிவித்தனர்.

இதை நம்பி 110 முதலீட்டாளர்கள் ரூபாய் 2.40 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால், இருவரும் உறுதியளித்தபடி முதலீட்டுத் தொகையை திரும்ப அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்டம் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விசாரணையின் முடிவில் கண்ணுசாமி மற்றும்மோகனசுந்தரம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.21 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், எனவே இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும் கண்ணுசாமி, மோகனசுந்தரம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதன்படி மறு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கண்ணுசாமி, மோகனசுந்தரம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2.42 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ரவி தீர்ப்பளித்தார்.

மேலும் விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடி ஆணை பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...