'ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட - கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்

அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டை பகுதியில் காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி முதலமைச்சர், "ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி" என்ற நூலை வெளியிட ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.


மதுரை: அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு "ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி" என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பெற்றுக் கொண்டார்.

அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்நெல்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தை பார்வையிட்டு, உணவு விநியோகம் செய்வதற்கான வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கீழ் அண்ணாத்தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு ரவா காய்கறி கிச்சடி ரவா கேசரி, காய்கறி சாம்பார் ஆகிய உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மாணவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.

திட்ட துவக்க விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பெரியகருப்பன், அன்பில் மகேஷ், கீதா ஜீவன், சி.வி.கணேசன், பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கோவை வடிவேலன் பாளையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1 ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டியை அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் கௌரவித்தார்.

மேலும், "ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி" எனும் நூலை முதலமைச்சர் வெளியிட கமலாத்தாள் பாட்டி பெற்றுக் கொண்டார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...