கோவையில் நூதன மோசடி..! தங்க புதையல் கிடைத்ததாக கூறி அலுமினியத்தை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி..!

கருமத்தம்பட்டியில் மளிகை கடைக்காரரிடம் ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்ததாக கூறி, 10 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு இரு மர்ம நபர்கள் அலுமினியத்தை கொடுத்துவிட்டு தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டி வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் இவர் அந்த பகுதியில் இரண்டு வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம், தொடர்ச்சியாக இரு வாலிபர்கள் மளிகை கடைக்கு வந்து செல்வதுமாக இருந்துள்ளனர். பின்னர், மளிகை கடை உரிமையாளர் சதாசிவத்திடம், நாங்கள் குழி தோண்டும் பணி செய்து வருகிறோம்.



அப்போது, ஒரு கிலோ தங்கம் புதையலாக கிடைத்தது. அதனை நாங்கள் உங்களிடம் கொடுக்கிறோம் 10 லட்ச ரூபாய் கொடுங்கள், எனக் கூறியுள்ளனர்.

அவர்கள் சொல்வது உண்மை என நம்பிய சதாசிவம், 10 லட்ச ரூபாயை கடைக்கு வந்த வாலிபர் இருவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டு அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதன்பின்பு அவர்கள் கொடுத்த நகையை பிரித்துப் பார்த்தபோது, அவை தங்கமில்லை, வெறும் அலுமினிய குண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம், இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து, கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அலுமினியத்தை தங்கம் என்று நம்பி ரூபாய் 10 லட்சத்தை ஏமாற்றி தப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...