காப்பர் தேவையை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மூலப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் - மேக் இந்தியா குழுமம் கோரிக்கை

காப்பர் விலை உயர்வால், நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் - மேக் இந்தியா குழுமத்தின் தலைவர் மனுநீதி மாணிக்கம்.



கோவை: காப்பர் தேவையை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் காப்பர் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என மேக் இந்தியா குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.



கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் காப்பர் விலை உயர்வு குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மேக் இந்தியா குழுமத்தின் தலைவர் மனுநீதி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...



காப்பரின் விலை உயர்ந்துள்ளதால், வெட் கிரைண்டர் மற்றும் பம்ப் செட் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை வளர்ச்சிகள் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, காப்பர் ஒரு கிலோ சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு கிலோ 750 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் காப்பர் மூலம் செய்யப்படும் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் சிறு குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காப்பரின் அதீத விலை உயர்வு காரணமாகநாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் காப்பருக்கு உண்டான தாது பொருட்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் கிடைக்கிறது. ஆனால் நம் நாட்டில் சொற்ப அளவில் மட்டும் தான் கிடைக்கப்பெற்று வருகிறது. ஏற்கனவே ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை கடந்த நான்கு வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது.

காப்பர் தேவையை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் தனியார் கூட்டமைப்பு மூலம் மூலப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். மீண்டும் காப்பர் ஆலையை இயக்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

அவ்வாறு பரிசீலனை செய்யும் பொழுது அதிலிருந்து வீணாகும் கழிவுகளை எப்படி மறுசுழற்சி செய்வது அதனை மீண்டும் எப்படி உபயோகப்படுத்துவது பாதிப்பில்லாத வகையில் எப்படி மாற்றுவது போன்ற அனைத்து விதமான தொழில்நுட்பங்களும் எங்களிடம் உள்ளது.

எனவே அரசாங்கம் முன் வந்து இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காப்பர் உற்பத்தி தொழிலை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லை என்றால் காப்பரின் விலை அதிகரித்து தொழில்துறையே முடங்கும் நிலைக்கு தள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...