கோவையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐ.டி ஊழியர்கள் மூவர் கைது - 2 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்..!

துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த மூவர் பிடிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த தேனியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜசாந்த் (23), கோவையை சேர்ந்த கவின் ராஜ் (21) மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த முகேஷ் கண்ணன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...