கண் தான விழிப்புணர்வு வாரம்: கண் தானம் குறித்து திருப்பூரில் விழிப்புணர்வு மனித சங்கிலி..!

தேசிய கண்தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது.



திருப்பூர்: கண் தான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவிகள் மனித சங்கிலி இயக்கம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கண் தான விழிப்புணர்வு வாரமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கத்தில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும், அதன் மூலம் இறந்த பிறகும் நமது கண்கள் மூலம் பிறர் உலகை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதை வலியுறுத்தி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இதில், தனியார் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு, கண் தானத்தை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...