திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் இந்தியா சார்பிலான சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சி இன்று துவங்கியது.
திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சியானது 100க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் இன்று முதல் தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் யார்னெக்ஸ் (Yarnex) மற்றும் டெக்ஸ்ட் இந்தியா (Texs India) சார்பிலான சர்வதேச அளவிலான பின்னலாடை நூல் கண்காட்சி இன்று துவங்கியது.
இக்கண்காட்சியை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், முதன்முறையாக சேலத்தில் தயாரிக்கப்பட்ட பேன்சி ரக நூல் அறிமுக விழாவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் 139 அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூல் தொடர்பான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
ஃபைபர்களில் இயற்கை ரகம் - பருத்தி, கம்பளி, பட்டு, செயற்கை இரகத்தில் ரீஜெனரேட்டட் மற்றும் சிந்தடிக், யார்ன்களில் இயற்கையானவை மற்றும் பிளெண்டுகள் ஆடை துணி ரகங்களில் நிட்டட், எம்பிராய்டரி, கிரே, இம்போர்ட்டட், டெனிம்/பாட்டம் வெயிட், பிரிண்டட், ப்ராசஸ்டு, சில்க், ஸ்பெஷால்டி, வெல்வெட், வுலன், மில்கள் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட ஷர்டிங் ரகங்கள், டிரிம்ஸ், எம்பலிஷ்மெண்ட்ஸ், பட்டன் முதலான ஏராளமான நவீன தயாரிப்புகளை இந்த நிறுவனங்கள் தங்களது அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளன.
இன்று 15 ஆம் தேதி முதல் வரும் 17 தேதி என இந்த கண்காட்சி அவிநாசி சாலையில் உள்ள இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக கண்காட்சி அரங்கில் நடைபெறும்.