கிணத்துக்கடவு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை - இருவர் கைது: 11 லிட்டர் கள் பறிமுதல்..!

கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் தோட்டத்துப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் சென்ற போலீசார் சொக்கனூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சொக்கனூர் தெற்கு தோட்டம் பகுதியில் கந்தசாமி என்பவரும் மேட்டுக்கடை தோட்டத்தில், நடராஜ் என்பவரும் கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழக அரசு தடை செய்யப்பட்ட கள்ளை விற்பனை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இருவரிடம் இருந்தும் சுமார் 11 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...