திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள் கைது..!

பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், விவசாயிகள் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ். ஜி. ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனம் 150 மீட்டரில் வீடு, தொழிற்சாலைகள் மற்றும் 250 மீட்டரில் அரசின் தொகுப்பு வீடுகள், குவாரியை ஒட்டியே அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவு இருப்பதை போலி ஆவணங்கள் தயாரித்து மறைத்தும், ஓடையை ஆக்கிரமித்தும், முறைகேடாக அனுமதி பெற்று நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்து, விவசாயி செந்தில்குமார் என்பவர் அவரது சொந்த நிலத்திலேயே 10வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்.



முறைகேடாக செயல்படும் இந்த கல்குவாரியால், அப்பகுதி முழுவதும் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி, இன்று அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் என 10 பெண்கள், இன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோடங்கிபாளையத்தில் அனுமதி இன்றி செயல்படும் கல்குவரிகளின் உரிமத்தை ரத்து செய்து உடனடியாக அவற்றை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.



அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.



சமீப காலமாக, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனுமதியற்ற கல் குவாரிகள் குறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முறையிடுவதும், அதற்கு பதிலளிக்கும் விதமாக கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொய் புகார் அளித்து ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க சிலர் முயற்சிப்பதாக மாறி மாறிக் குற்றம் சாட்டி ஆட்சியரிடம் மனு அளிப்பதும், போராட்டங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...