கோவை மாநகராட்சியின் 81 வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் பொது சுகாதார குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை: கோவை மாநகராட்சியின் 81 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை பொது சுகாதார குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை மாநகராட்சியின் 81 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கேகவுடர் வீதி, ராமர் கோயில் வீதி, தொரையர் வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூய்மைப் பணிகளை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பொது சுகாதாரக்குழு தலைவர் முனைவர் பெ.மாரிசெல்வன், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் உள்ளிட்டோர் 81 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்க்கெட் மனோகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில், மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் திமுகவினர் N.J.முருகேசன், டவுன் ஆனந்தன், மில்முருகன், ஆட்டோரவி, வடிவேல், செந்தில்குமார், சோமு, தாமஸ்வீதி ராஜா, கோபி, பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும், இன்று நடைபெற்ற தூய்மைப் பணிகள் மாநகராட்சியின் நவீன வாகனங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.