எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி இன்று ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியால் சிக்கி தவிக்கிறது - கோவையில் டிடிவி தினகரன்.

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டி காப்பாற்றிய அதிமுக என்ற இயக்கம், ஒரு சிலரின் ஆணவம்,பதவி வெறியில் சிக்கித் தவிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அண்ணாவின் 114 வது பிறந்தநாளைமுன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். மேலும், அதிமுகவில் நடக்கும் கூத்தைபற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை. அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது.

தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக் காத்த இயக்கம். ஒரு சிலரின்ஆணவத்தாலும்,பதவி வெறியாலும், சுயநலத்திலும் சிக்கி இருக்கிறது. இதற்குகாலம் பதில் சொல்லும், எல்லாம் சரியாகிவிடும்.

தேர்தல் நேரத்தில் கொடுத்தவாக்குறுதிகளைதிமுகநிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிச்சுமையை ஏற்றி மக்களை துன்பப்படுதுவது தான்திராவிட மாடல் என்பதை திமுகநிரூபித்து வருகின்றது. இதற்கு, நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.



எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்கக் கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்றுக்

கொள்ளமாட்டார்கள்.

கொரோனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டியைகுறைக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில்மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் என்பது மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம், முறைகேடுகளைஅனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது.

நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ருபாய், சொத்து வரி குறைப்புஎன பல்வேறு வாக்குறுதிகளை திமுகநிறைவேற்றவில்லை. திமுகவினர்திருந்தவே மாட்டார்கள் என மக்கள் உணர்கின்றனர். எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும்.

தற்போதைய திமுக அரசு அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து வருகிறது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...