கோவையில் அரசு பள்ளி கழிவறையில் +1 மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

குடும்ப பிரச்சினையில் உறவுக்கார பெண்கள் மிரட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான +1 மாணவி அரசு பள்ளி கழிவறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தற்கொலைக்கு தூண்டிய 3 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: ஒப்பணக்கார வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மரக்கடை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு மாணவி நடந்து சென்ற போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவுக்கார பெண்கள் 3 பேர் மாணவியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், மன உலைச்சலுக்கு ஆளான மாணவி கடைக்கு சென்று கொசு விரட்டும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி கழிவறைக்கு சென்று, தான் வாங்கி வைத்திருந்த கொசு விரட்டும் மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் செல்போன் மூலம் குழந்தைகள் உதவி மையத்துக்கு அழைத்து விஷம் குடித்த தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளி கழிவறையில் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய என்.எச்.ரோடு சந்திரன் தெருவை சேர்ந்த சுமையா (22), சிபானா பர்வீன் (24) மற்றும் இவர்களின் தாய் ரஷீதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...