மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.40,000 மதிப்புள்ள 16 கிராம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 3 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் நேற்று சிறுமுகை காவல்நிலைய ஆய்வாளர் வேளாங்கண்ணி உதயரேகா குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் சேரன் நகர் பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் (21), விஜய் ஆனந்த் (19) மற்றும் டி.ஆர்.எஸ். ஹவே சிட்டி பகுதியை சேர்ந்த மார்சல் (22), ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 16 கிராம் எடை கொண்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூர் பகுதியில் இருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், இதனை நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்துவதற்காக ஒன்றாக சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமுகை போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.