ஏ.டி.எம்-ல் பணம் வராமல், கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட விவகாரம் - இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு..!

பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.20,000 பணத்தை, 12 சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயும் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: அரசூர் அருகே ஏ.டி.எம்-ல் பணம் வராமல் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரசூர் அருகேயுள்ள கொல்லுபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் மில் தொழிலாளியான இவர், சின்னியம்பாளையம் இந்தியன் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கருமத்தம்பட்டியில் உள்ள 'டிஎம்பி' வங்கி ஏ.டி.எம்-ல் அவசர தேவைக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி, 10,000 ரூபாய் எடுப்பதற்கு முயன்றுள்ளார். முதல் முறை முயன்ற போது, ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இரண்டாவது முறையாக, அதே தொகையை எடுக்க முயன்ற போது, தற்காலிகமாக செயலில் இல்லை என்று காட்டியுள்ளது. 

இந்நிலையில் மற்றொரு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்ற போது, அவரது வங்கி கணக்கில் பணம் இருப்பு இல்லை என வந்துள்ளது. அதாவது, ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து பணம் வராமலேயே, ரூ.20,000 எடுத்து விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், சம்பந்தப்பட்ட வங்கிக்கு பலமுறை சென்று கேட்ட போதும், உரிய பதில் அளிக்கவில்லை என்றும், பணத்தை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஆறுமுகம், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், இந்தியன் வங்கி சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டது. 

எனவே பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 20,000 ரூபாயை, 12 சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...