CCP Cup: கோவை மாநகர காவல்துறை Vs பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டிகள் - காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்கும் முயற்சியாக, வரும் 24 முதல் 30 தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும், பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இப்போட்டிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன.



கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, கோவை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை காக்கும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

வரும் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியானது காவல்துறைக்கு தனியாகவும், பொதுமக்களுக்கு தனியாகவும் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் - பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த தொடரின் லீக் போட்டிகள் கோவை வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதி போட்டிகள் வரும் அக்டோபர் 2ஆம் தேதி பி.எஸ்.ஜி ஐ.எம் மைதானத்தில் நடைபெற உள்ளது.



இதில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாவது பரிசு ரூ.7,500, நான்காவது பரிசு ரூ.3,000 வழங்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...