ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் - கோவையில் வெட் கிரைண்டர், உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்திருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில், ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு பின் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 30,000 க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.



கோவை: ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவையில் வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சமீபத்தில் வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரியானது 5 சதவீதத்தில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதனை திரும்ப பெற கோரி பலமுறை வெட்கிரைண்டர்கள் சங்கத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோயமுத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறுந்தொழில் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், செளந்தர்மோகன் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்க தலைவர் செளந்தர்குமார், மத்திய அரசு 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டர் மீது ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியது. அதனை திரும்ப பெற வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் சங்கம் எந்த அரசையும் எதிர்ப்பதும் அல்ல எந்த கட்சியையும் சார்ந்ததும் அல்ல. ஜி.எஸ்.டி வரி உயர்விற்கு முன் கல் பிரச்சனை இருந்து வந்தது. அதனை தொடர்ந்தே மூல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது .

இதனால் மிகப்பெரிய அளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 18% ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் இன்னும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலை உயர்வால் வாங்கும் மக்களும் குறைந்து விட்டனர்.

இதனால் வியாபாரம், உற்பத்தி என அனைத்தும் குறைந்து இந்த தொழிலை நம்பி இருக்க கூடிய பெண்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...