எல்.இ.டி முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.32.98 லட்சம், 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் பறிமுதல்

சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: எல்.இ.டி விளக்கு முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள், அவர்களது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில், இது குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதில், கூறியிருப்பதாகவது: தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அவர்கள் தான் அமைச்சராக பணியாற்றிய 2015 முதல் 2018 வரையான காலகட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்துள்ளார்.

தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணி வழங்கிய வகையில், அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.05/2022 சட்டப்பிரிவு 120(B) r/w 420, 409 IPC and u/s 13(2) r/w 13(1) (C) & 13 (2) r/w 13 (1) (d) of the Prevention of Corruption Act, 1988 and r/w 13(2) r/w 13(1) (a) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 ன்படி வழக்கு முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 9 தனிநபர்கள் / நிறுவனங்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 9 இடங்களிலும், கோயம்பத்தூரில் 14 இடங்களிலும், திருச்சியில் 2 இடங்களிலும், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டில் தலா 3 இடங்களிலும், ஆக மொத்தம் 31 இடங்களில் இன்று 13.09.2022 சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி, சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.

இவ்வாறு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...