வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் இல்லத்தில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.


கோவை: சென்னை மற்றும் கோவையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் இல்லங்களிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி பகுதியில் உள்ள கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் காலை 6:00 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சுமார் 9 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சோதனை நிறைவு பெற்றது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சில ஆவணங்கள் லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர். சோதனை முடிவடைந்த நிலையில், சந்திரசேகர் காரில் புறப்பட்டு சென்றார்.



இதனிடையே அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான சிஆர் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...