பல்லடம் அருகே 3000 க்கும் மேற்பட்ட கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 3000க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம், 63 வேலம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகள் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதாக பல்லடத்தில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பல்லடம் பகுதியில் உள்ள கல்வாரி ஒன்றிற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்தது.

இதனை அடுத்து சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அதிகாரிகளிடம் கல் குவாரிகளை மூட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தும், கல் குவாரிகளில் இருந்து தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி மற்றும் கட்டிட வேலைக்கு தேவையான எம்.சாண்ட் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இது போன்ற புகார் அளிப்பதால் கட்டிட பொருட்கள் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதுடன், தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.



சமூக ஆர்வலர்கள் போர்வையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 3000 க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



800 க்கும் அதிகமான டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பிகளை நிறுத்தியுள்ளனர்.



விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் அரசின் விதிகளோடு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகளும், உள்நோக்கத்துடன் கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிமையாளர்களும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...