கல்லூரி மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்த கூரியர் நிறுவன ஊழியர் கைது..!

பீளமேடு அருகே கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்து துன்புறுத்திய கூரியர் டெலிவரி ஊழியரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: பீளமேடு அருகே கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்து துன்புறுத்திய கூரியர் டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்திபுரம் நான்காவது வீதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (27). கூரியர் நிறுவனத்தில் 'டெலிவரி' செய்யும் ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த 10ஆம் தேதி பகல், 12:30 மணிக்கு பீளமேடு எல்லைத்தோட்டம் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியில் வந்த கல்லுாரி மாணவி ஒருவரை ஆபாசமாக கேலி செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, மாணவி தனது பெற்றோர் உதவியுடன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிறப்பு எஸ்.ஐ. முருகேசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தரவின் படி சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...