பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை ஸ்டிக்கரை பார்த்து தன் தாய் என நினைத்து பேருந்தின் பின் ஓடிய குதிரை குட்டி - கண் கலங்கிய மக்கள்..!

பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த, அந்த குட்டி குதிரை அது காணாமல் போன தனது தாய் குதிரை என நினைத்து பேருந்தை செல்ல விடாமல் சுற்றி சுற்றி வந்துள்ளது. குட்டி குதிரையின் பாசத்தை பார்த்த பொதுமக்கள் கண் கலங்கி நின்றனர்.



கோவை: கோவையில் தனியார் பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்து தாய் என நினைத்து குட்டி குதிரை ஒன்று நீண்ட தூரம் பின்னாலே சென்ற சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது அங்குள்ள தோட்டத்தில் உள்ள புற்களை உணவாக சாப்பிட்டு விட்டு அதே பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, அந்த குதிரை கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்து குட்டிக் குதிரை தாய் குதிரையை தேடியபடி இருந்துள்ளது.



இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த அந்த குட்டி குதிரை பேருந்தை செல்ல விடாமல் பேருந்தையே சுற்றி சுற்றி வந்துள்ளது.



சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியவுடன், தாய் குதிரை இருப்பது போன்ற ஸ்டிக்கரை பார்த்து பேருந்தை விடாமல் துரத்தி சென்று கத்தியது.

குட்டி குதிரையின் பாசத்தை பார்த்த பொதுமக்கள் கண் கலங்கி நின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...