கோவையில் 3 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட தந்தையின் உடல் - கல்லறை கட்டுவதற்காக மீண்டும் தோண்டி உதகை எடுத்துச் சென்ற மகன்..!

புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுக்க ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், பலகட்ட விசாரணைக்கு பின்னர் வருவாய் துறையினர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்பு உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.


கோவை: துடியலூர் அருகே புதைக்கப்பட்ட தந்தையின் உடலை, கல்லறை கட்டுவதற்காக 3 மாதத்திற்கு பின் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துடியலூர் அடுத்துள்ள வடமதுரை வி.ஐ.பி காலனியை சேர்ந்தவர் பிரவீன் சாமுவேல். இவரது தந்தை ரிச்சர்ட் அசரியா, கடந்த ஜூன் 12-ம் தேதி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அப்போது, அவரது உடல் தொப்பம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதி சிறிய இடமாக இருந்ததால் அங்கு கல்லறை கட்ட அனுமதி வழங்கபடவில்லை. ஆனால், பிரவீன் சாமுவேல் மற்றும் குடும்பத்தினர் தனது தந்தை ரிச்சர்ட் அசரியாவுக்கு கல்லறை கட்ட விரும்பியுள்ளனர்.

இதற்காக ஊட்டியில் இவர்களது குடும்பத்தினர் உறுப்பினராக உள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து கல்லறை கட்ட அனுமதி கிடைத்தது. இதனையடுத்து, தந்தை ரிச்சர்ட் அசரியாவின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பலகட்ட விசாரணைக்கு பிறகு, ரிச்சர்ட் அசரியாவின் சடலத்தை தோண்டி எடுக்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கிடைத்தது.

இதனை அடுத்து 3 மாதங்களுக்கு பின்பு நேற்றைய தினம் வருவாய் துறையினர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்பு ரிச்சர்ட் அசரியாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், உதகையில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து பிரவீன் சாமுவேல் கூறும் போது, தந்தைக்கு கல்லறை கட்ட வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...