உலக தற்கொலை தடுப்பு தினம்: கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..!

விழிப்புணர்வு பேரணியில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.



கோவை: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.



உலகம் முழுவதும் செப்டம்பர் 10ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று மனம் அமைப்பு மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



இதில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தற்கொலையை தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.



இன்று காலை, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியானது ரயில் நிலையம் வழியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து நீதிமன்றம் வழியாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...