கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கம்மல் பறிப்பு; இருவருக்கு போலீசார் வலைவீச்சு..!

சுங்கம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காதணியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற நிலையில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: சுங்கம் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியின் காதணியை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுங்கம் அடுத்த சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவரது மனைவி ஆரோக்கியமேரி (60), சர்க்கரை நோய் உள்ளதால், அவர் தினமும் திருச்சி சாலையில் சுங்கம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் வழக்கம்போல் சிவராம் நகர் அருகே நடைபயிற்சி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், ஆரோக்கியமேரி காதில் அணிந்திருந்த ஒரு சவரன் காதணியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் காதணியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...