EWS 10 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன சரத்துகளுக்கும் 1992ல் உறுதி செய்யப்பட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்பதால், மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக வரும் 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.



கோவை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வரும் 16ம் தேதி கோவையில் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 2021 வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 13ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.



இதில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசன சரத்துகளுக்கும் 1992ல் உறுதி செய்யப்பட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1992ல் உறுதி செய்யப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில், இந்த 30 ஆண்டுகளில் இன்னும் சராசரியாக 15 சதவீத இட ஒதுக்கீட்டை கூட கொடுக்காமல் புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுமையானது.



எனவே, மத்திய அரசின் இந்த 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து, அனைத்து சமுதாய ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு பெற சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக வரும் 16 ந்தேதி அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சந்திப்பின் போது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் துணைத் தலைவர் வெள்ளியங்கிரி உட்பட உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...