கோவை ஆட்சியரை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம் ஒன்றை அவரிடம் வழங்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கோவை: அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈசுவரன் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கி அலுவலகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய வெ.ஈஸ்வரன், தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவரே பேரறிஞர் அண்ணா தான் என்றும், தமிழக முதல்வரும் தங்களது இந்த கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.