கோவை சிங்காநல்லூர் அருகே பரபரப்பு: மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மர்மமான முறையில் கொலை - போலீசார் விசாரணை…!

மூதாட்டியின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில், நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சிங்காநல்லூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 77 வயது மூதாட்டி மர்மமான முறையில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மயிலாத்தாள்(77). இவரது கணவர் ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதால், மகனும் 20 ஆண்டுகளுக்கு முன் மாயமானதாக கூறப்படுகிறது.

வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கடந்த 2 நாட்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, இதுகுறித்து அவரது சகோதரி கண்ணம்மாளுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கண்ணம்மாள் வந்து வீட்டைத் திறந்து பார்த்த போது மூதாட்டியின் கைகள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு, கழுத்து கிரைண்டர் வயரால் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...