முட்டி மோதும் வாகனங்கள் - இட நெருக்கடியால் ஆத்துப்பாலம் மேம்பால பணிகளுக்கு சிக்கல்..!

வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல வழிவகை செய்யும் பட்சத்தில் மட்டுமே குறித்த காலத்திற்குள் மேம்பால பணிகளை முடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.



கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் இடையேயான மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகன நெரிசல் காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்திற்கு இடையே பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.



தற்போது, பாலத்தின் இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழிப்பாதையில் பகல், இரவு என இரண்டு வேலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.



இந்த பாலம் அமைக்கும் வழியை விட்டால், வாகனங்கள் 3 கி.மீ தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால், இவ்வழியில் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக்கையாகி விட்டது.



எனவே, வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பால பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் பாலங்கள், இரும்பு பொருட்கள், ஜல்லி, சிமெண்ட் கொட்ட இடமின்றி கட்டுமான பணியாளர்கள் திணறி வருகின்றனர்.



மேலும், மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடவசதியின்றி பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பணி நடத்தும் போது வாகனங்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வாகனங்களை மாற்றுப்பாதையில் விட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையிடம் கேட்ட போது, இரு பிரதான சாலையில் இருந்து அதிக வாகனங்கள் வந்து செல்கிறது. செல்வபுரம் பைபாஸ், புட்டுவிக்கி ரோட்டில் வாகனங்கள் சென்று வரலாம். ஆனால், அவ்வாறு செல்லாமல் பெரும்பாலான வாகனங்கள் 3 கி.மீ தூரத்தை சுற்றிவர சலித்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது.

கட்டுமான பணிகள் தொடங்கும் போது, அடைத்து வைக்கப்பட்ட சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வரும் திட்டம் இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பிரச்சினை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது. இப்போது நிலைமை கைமீறி போய்விட்டது.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் கட்டுமான பணி செய்ய முடியவில்லை எனக்கூறும் பணியாளர்கள், எப்படி பாலத்தின் இறங்கு தளம் பணிகளை மேற்கொள்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல வழிவகை செய்யும் பட்சத்தில் மட்டுமே குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும் என்று பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...