கோவை மக்களை கவர்ந்த 'All In All' அங்காடி, பொருட்காட்சி - வார இறுதியில் திருவிழாக் கோலம் பூண்ட உக்கடம் பெரியகுளம்..!

கோவை மாநகராட்சி நிர்வாகத்துடன், ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 நாள் பொருட்காட்சியில் தின்பண்டங்கள் விற்பனை ஸ்டால்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், படகு சவாரி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட all in all அங்காடி மற்றும் பொருட்காட்சிக்கு ஏராளமான மக்கள் வருகை தந்து வார இறுதியை சிறப்பாக கொண்டாடினர்.



கோவை smart சிட்டி திட்டத்தின் கீழ்மேம்படுத்தப்பட்ட உக்கடம் அடுத்த பெரியகுளத்தில் மாநகராட்சி நிர்வாகத்துடன், ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து இரண்டு நாள் "All in All" அங்காடி மற்றும் பொருட்காட்சி ஆகியவை நடைபெற்றது.

வார இறுதியை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொருட்காட்சியை சனிக்கிழமை அன்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.

இந்த பொருட்காட்சியில், பெண்களுக்கான அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மின்சார உபகரணங்கள் சமையல் பொருட்கள் உணவுப் பொருட்கள் தின்பண்டங்கள் என பலதரப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகள் படகு சவாரி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் உக்கடம் பெரிய குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு படகு சவாரி செய்து குடும்பத்தாருடன் வாரக் கடைசியை மகிழ்ச்சியாக களித்தனர்.

மேலும் இங்கு வருகை புரிந்த அனைவரும் "I Love Kovai" என்ற செல்ஃபி ஸ்பாட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.



இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொழுது போக்கு அம்சங்கள் குறிப்பாக குழந்தைகளுக்கான விளையாட்டு ஏற்பாடுகள் நல்ல ஒரு பொழுது போக்காக அமைந்திருந்ததுஎன்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், இது போன்று நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றுகோரிக்கை வைத்தனர்.

அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால்,உக்கடம் பெரிய குளம் திருவிழா கோலம் போல் காணப்பட்டது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...