ஒன்றிய அரசுப் பணிகளில் அதிகரித்து வரும் பார்ப்பனிய ஆதிக்கம் - நவ.7-ல் சாஸ்திரி பவனை முற்றுகையிட த.பெ.தி.க முடிவு..!

ஒன்றிய அரசு பணிகளில் பார்ப்பனீய ஆதிக்கமும், வடமாநிலத்தவர்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருவது குறித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக, திருப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஒன்றிய அரசுப் பணிகளில் அதிகரித்து வரும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து வரும் நவம்பர் 7ஆம் தேதி சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, வெளியிட்டு செயலாளர், மனோகரன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கு.ராமகிருஷ்ணன், தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திராவிட மடல் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்கள் இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என பெரியார் வழியில் திராவிட மாடல் ஆட்சிசிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒன்றிய அரசின் பணிகளான, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்,தபால் துறை, தூதரக பணியிடங்கள், ரயில்வே துறை, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பார்ப்பன ஆதிக்கம் அதிகம் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அங்கு இடம் கிடைப்பதில்லை, வட மாநில ஆட்களின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது.

இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இறுதியாகநவம்பர் 7 சென்னையில் உள்ள சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், திருப்பூர் தொழில் நகரம்நசிந்து போய் உள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் தொழிலை காக்க, பருத்தி, நூல் ஆகியவற்றைஅத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...