கோவை உக்கடம் புதிய மேம்பால பணியின் போது தாங்கு சாரம் சரிந்தது

உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு ஏறு தழுத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு, பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்ட கான்கிரீட் பாலம் சாயத் துவங்கி உள்ளது.


கோவை: கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதில், மூன்று இடங்களில் ஏறு தளம் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளன.



உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு ஏறு தழுத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 3000-க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை இணைத்து சாரம் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது.200 அடி நீளத்திற்கும் 100 அடி அகலத்திற்கும் போடப்பட்ட கான்கிரீட் பாலம் சாயத் துவங்கி உள்ளது.



இதனால், அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் பணியை நிறுத்தினர். பாலம் சரியப் போவதை கண்டு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம், விபத்தை முன்கூட்டியே அறிந்ததால்,எவ்வித பெரும் விபத்துகளின்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்தப்பினர்.

இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், சாரத்தில் இருந்த இணைப்பு கிளாம்புகள் சில இடங்களில் துண்டாகிவிட்டதாகவும்இதை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கும் எனவும்கான்கிரீட் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கான்கிரீட் பாலம் விழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திடீரென சாரம் சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...