ஈஷா-விற்கு எதிரான பதிவிட்ட செய்திக்‌ கட்டுரையைத்‌ அடுத்த உத்தரவு வரை முடக்க VICE மீடியா குழுமத்திற்கு நீதிமன்றம்‌ உத்தரவு

அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன்‌ மூத்த நிருபர்‌ பல்லவி பண்டிர்‌ ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய ஆன்லைன்‌ செய்தி கட்டுரையின்‌ URL-ஜ, அடுத்த உத்தரவு வரும்‌ வரை முடக்கி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: கடந்த செவ்வாயன்று, விஜயவாடா 2-வது கூடுதல்‌ மாவட்ட நீதிமன்றம்‌, அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன்‌ மூத்த நிருபர்‌ பல்லவி பண்டிர்‌ ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய ல ஆன்லைன்‌ செய்தி கட்டுரையின்‌ URL-ஜ, அடுத்த உத்தரவு வரும்‌ வரை முடக்கி வைக்கவும், இந்த வழக்கை வருகின்ற 23 செப்டம்பர்‌ 2022 அன்று மீண்டும் நீதிமன்றம்‌ விசாரிக்கும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன்‌ 23 தேதியிட்ட செய்திக் கட்டுரையில்‌ குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள்‌ தவறானவை என்பதை நிரூபிக்கும்‌ ஆர்‌.டி.ஐ.களின்‌ அதிகாரபூர்வ பதில்கள்‌, நீதிமன்ற உத்தரவுகள்‌ மற்றும்‌ பொதுத்தளத்தில்‌ உள்ள சம்பந்தப்பட்ட துறையின்‌ ஆவணங்கள்‌ உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும்‌ ஈஷா அறக்கட்டளை நீதிமன்றத்தில் வழங்கியது.

ஈஷா அறக்கட்டளை மற்றும்‌ சத்குரு மீது தவறான, ஜோடிக்கப்பட்ட மற்றும்‌ சரிபார்க்கப்படாத பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாக வெளியிட்ட VICE ஊடக குழுவிற்கும்‌ அதன்‌ மூத்த நிருபருக்கும்‌ எதிராக ஈஷா அறக்கட்டளை மற்றும்‌ ஈஷா அவுட்ரீச்‌ செப்டம்பர்‌ 1 அன்று அவதூறு வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்லவி பண்டிர்‌ மற்றும்‌ வைஸ்‌ மீடியா எல்‌.எல்‌.சி.க்கு ஈஷா சட்டப்பூர்வ நோட்டீஸ்‌ அனுப்பியதைத்‌ தொடர்ந்து, வெளியிடப்பட்ட கட்டுரையை முழுவதுமாக திரும்பப்‌ பெறவும்‌, இதுபோன்ற பொய்யான அறிக்கைகளையும்‌, அப்பட்டமான தவறான தகவல்கள்‌ வெளியிடுவதை நிறுத்தவும்‌ மற்றும்‌ தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும்‌ அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...