தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது - கவலையில் பொதுமக்கள்..!

பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு: தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அப்போது, மின் கட்டண உயர்வு குறித்த உத்தேச கட்டண விவர பட்டியலையும் வெளியிட்டார். மேலும், மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய மின் கட்டண உயர்வால், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும்.

மேலும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 145 ரூபாயும், 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால், இரு மாதங்களுக்கு கூடுதலாக 295 ரூபாயும் வசூலிக்கப்படும். அதேபோல, 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 595 ரூபாய் வசூலிக்கப்படும்.

அதேபோல், 500 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 310 ரூபாய் வசூலிக்கப்படும். 600 முதல் 700 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 550 ரூபாய் வசூலிக்கப்படும்.

700 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 790 ரூபாய் வசூலிக்கப்படும். 800 முதல் 900 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 1,130 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த மின் கட்டண உயர்வானது 2026-27ஆம் நிதியாண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...