4 வது முறையாக நிரம்பவுள்ள சிறுவாணி அணை - அடுத்த 6 மாதங்களுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை: அதிகாரிகள் தகவல்

வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை நோக்கி நகர்ந்து வரும் அணையின் நீர்மட்டம் தற்போது 44.12 அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்து வருவதனால் இந்த வாரத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கோவை: கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், நான்காவது முறையாக சிறுவானி அணை முழு கொள்ளவை ஏட்டவுள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு, கோவை மாநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது சிறுவாணி அணை. உலகின் சுவை மிகுந்த இரண்டாவது நீர் சிறுவாணி என்ற தன்னற்ற இடத்தை கொண்ட சிறுவாணி நீர், கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவே திகழ்கின்றது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 22 வார்டுகளுக்கு சிறுவாணி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், 7 டவுன் பஞ்சாயித்துகள், 10 கிராம ஊராட்சிகளுக்கும் சிறுவாணி அணையே முக்கிய நீர் ஆதாரமாகும்.

சிறுவானி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், அடிவாரத்தில் அடை மழை பொழிந்து வருவதனால் அணை நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. எனவே, சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட முழு கொள்ளளவான 45 அடியை இந்த வருடத்தில் நான்காவது முறையாக எட்டயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.



வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை நோக்கி நகர்ந்து வரும் அணையின் நீர்மட்டம் தற்போது 44.12 அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்து வருவதனால் இந்த வாரத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவாணி அடிவாரத்தில் மழை அளவு 31 மி மீ ஆகவும், சிறுவானி அணைக்கட்டு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு 102 மி மீ ஆகவும் பதிவாகி உள்ளது.



தொடர் மழைபொழிவு உள்ளதால், முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், சிறுவானி அணை மீண்டும் நிரம்பினால் இந்த வருடத்தில் நான்காவது முறையாக நிரம்பியதாக கணக்கிடப்படும், என்றனர்.

மேலும், இந்த நிலை நீடித்தால், அடுத்த ஆறு மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...