வார்டு எண் 18, 26, 10 மற்றும் 22 யில் பள்ளி, நகர்நல மைய கட்டிடம் என பல்வேறு கட்டுமான பணிகளை மேயர் கல்பனா துவங்கி வைத்தார்

ரூ.4.79 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடம், நகர்நல மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த மேயர், கட்டிடங்களை தரமாகவும், விரைவாகவும் கட்ட வேண்டும் என பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும்‌ மேற்கு மண்டலத்தில் ரூ.4.79 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பள்ளி, நகர்நல மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவக்கி வைத்தார்.

கோவை‌ மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும்‌ மேற்கு மண்டல பகுதிகளில்‌ 9 இடங்களில்‌ 4 கோடியே 79 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறை கட்டிடங்கள்‌, நகர்நல மையம்‌, பொதுக் கழிப்பிடம்‌, மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கப்பட உள்ளன.



இந்த கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த பூமிபூஜையில், கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.



பின்னர், மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் 18வது‌ வார்டுக்கு உட்பட்ட நல்லாம்பாளையம்‌, ராமசாமி நகா்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணி‌ மற்றும் வார்டு எண்‌.19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ரூ.99 லட்சத்து 10 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகளுக்கான கட்டுமான பணி துவங்கப்பட்டது.



இந்த பூமிபூஜையின் போது, 82 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டது.



மேலும்‌, அப்பள்ளியிலுள்ள கழிப்பறைகள்‌ சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கப்பட்டது.



இதனைத் தொடா்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.26க்கு உட்பட்ட பயனியர் (pioneer) மில் சாலையில்‌ உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.16 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டும்‌ கட்டுமான பணி‌, வார்டு எண்‌.25க்கு உட்பட்ட காந்திமா நகரில்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பொது கழிப்பிடம்‌ கட்டுமான பணியும் துவங்கி வைக்கப்பட்டது.



‌அதேபோல, 10வது வார்டுக்கு உட்பட்ட ராமானந்தா நகர்‌ மற்றும்‌ எஸ்‌.பி.எஸ்‌.நகரில்‌ ரூ.29 லட்சத்து 60 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ சிறுபாலம்‌ அமைக்கும்‌ பணி‌,



ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறை கட்டுமான பணி‌ துவக்கி வைக்கப்பட்டது.



மேலும், கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22க்குட்பட்ட சேரன்‌ மா நகா்‌, அம்பாள்‌ நகர்‌ பகுதியில்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகாநல மையம்‌ கட்டுமானப் பணி,



மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16க்கு உட்பட்ட எம்‌.ஜி.ஆர்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி பள்ளியில்‌ ரூ.74 லட்சத்து 95ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ புதிய வகுப்பறை கட்டுமான பணி‌ என் மொத்தம்‌ ரூ.4 கோடியே 79 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து மேயர் கல்பனா துவக்கி வைத்தார்.

இதனையடுத்து பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்‌. முன்னதாக, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22க்குட்பட்ட சேரன்‌ மா நகரில்‌ மாநகராட்சி தள்ளுவண்டி தாய்மைப்‌ பணியாளா்களுக்கு மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளுக்கு தள்ளுவண்டிகளுக்கான புதிய குப்பைத்‌ தொட்டிகளை வழங்கினார்‌.

இந்நிகழ்ச்சிகளில்‌, மண்டல குழு தலைவா்கள்‌ கதாவேல்‌, கே.ஏ.தெய்வயயானை தமிழ்மறை, கல்விக்குழு தலைவர்‌ மாலதி நாகராஜ்‌, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, மாமன்ற உறுப்பினா்‌கள், உதவி ஆணையாளர்கள் முத்து ராமலிங்கம்‌(கிழக்கு), சேகர்(மேற்கு), மாநகர கல்வி அலுவலர்‌ கே.பாண்டிய ராஜ சேகர்‌, செயற்பொறியாளர்‌ முருகேசன்‌, உதவி செயற்பொறியாளா்‌ செந்தில்பாஸ்கா்‌, உதவி நகரமைப்பு அலுவலா்கள்‌ ஜெயலட்சுமி, கலாவதி, சுகாதார ஆய்வாளர்‌ ஜெரால்டு சத்ய புனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...