கிணற்றுக்குள் பாய்ந்த கார்..! கோவை தொண்டாமுத்தூர் அருகே ஓணம் கொண்டாடி விட்டு வீடு திரும்பிய நான்கு கல்லூரி மாணவர்களில் மூவர் விபத்தில் பலி..!

போளுவாம்பட்டி - தொண்டாமுத்தூர் இடையே உள்ள தென்னமநல்லூர் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தோட்டத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு கிணற்றில் பாய்ந்தது. அதில், ஒருவர் தப்பித்த நிலையில், மூவர் பலியாகினர். இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.








கோவை: நேற்று ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில், வீடுகளை கடந்து தனியார் கிளப்களிலும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. அதன்படி, கோவையை சேர்ந்த 4 மாணவர்கள் கிளப் ஒன்றில் ஓணம் கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது, விபத்துக்குள்ளாகி அதில் மூன்று மாணவர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன் (18) நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது உறவினர் காரில் நண்பர்களான வடவள்ளி பகுதியை சேர்ந்த ஆதேஷ், ரவி, நந்தனன் உள்ளிட்டவர்களுடன் கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிபிரிட்டி என்ற தனியார் கிளப்பில் பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார்.

அப்போது, கிளப்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களும் நேற்று இரவு அங்கேயே தங்கியுள்ளனர். பின்னர், இன்று காலை 6 மணி மணியளவில் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். காரில் அதிவேகமாக பயணித்ததாக கூறப்படும் நிலையில், போளுவாம்பட்டி - தொண்டாமுத்தூர் இடையே உள்ள தென்னமநல்லூர் அருகே அவர்களது கார் வந்த போது, அப்பகுதியிலுள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த கார், அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.



கிணற்றில் 50 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால், நான்கு பேரும் உயிருக்கு போராடினர். அப்போது, காரை ஓட்டிய ரோஷன் என்பவர் காரின் கதவை திறந்து கிணற்றுக்கு மேலே வந்தார். அதே சமயத்தில், அவரது மூன்று நண்பர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

விபத்தில் தப்பித்த ரோஷன் அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இருந்த காரை மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கிணற்றில் தண்ணீர் அதிகம் இருப்பதனால், நீரை பம்புகள் கொண்டு வெளியேற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீரில் மூழ்கிய மூன்று மாணவர்களின் உடலை மீட்க கிராம மக்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.



சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நண்பர்களுடன் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விட்டு, வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் அவர்களது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...