துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், துடியலூர் ராஜன் காலனி TVS நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். போதைப் பொருள்கள் குறித்து காவல்துறையை தொடர்பு கொள்ள 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை, சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், துடியலூர் ராஜன் காலனி TVS நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார் (48) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 100 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறையை தொடர்பு கொள்ள 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.