உலக முதலுதவி தினம்: கோவையில் சாதனை முயற்சியாக 5000 மாணவர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி

உலக முதலுதவி தினத்தையொட்டி வரும் 10-ஆம் தேதி கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் 5000 மாணவ - மாணவிகளுக்கு முதலுதவி செய்முறை பயிற்சி அளிக்கும் உலக சாதனை முயற்சி நடைபெற உள்ளது.


கோவை: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு வரும் 10-ம் தேதி உலக சாதனை முயற்சியாக 5000 மாண்வர்களுக்கு முதலுதவி செய்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

முதலுதவி செய்து பல உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று, உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டின் முதலுதவி தினம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்.ஜி.ஓ நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக வரும் 10-ம் தேதி 5000 பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 10-ம் தேதி அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 1,000 பேர், அண்ணா பல்கலைக்கழக மாணவ - மாணவிகள் 1,000 பேர், குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 200 பேர், குமரகுரு பள்ளி மாணவ - மாணவிகள் 1,000 பேர், குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 2,000 பேர் என 5000க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவும் தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...