கழிவு பஞ்சு விலை உயர்வு: உச்சகட்ட நெருக்கடியில் ஒ.இ ஸ்பின்னிங் மில்கள் - ஊசலாடும் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்.

எதுவும் வேஸ்ட் அல்ல. வேஸ்ட்டே எங்கள் மூலதனம் என்று இயங்கும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களின் (ஓ.இ) முக்கியமான மூலப்பொருளான கழிவு பஞ்சின் விலை முந்தைய ஆண்டு கிலோ 80 ரூபாயில் இருந்து, ஒரு கிலோ கழிவு பஞ்சு 140 ரூபாயாக உயர்ந்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை:.எதுவும் வேஸ்ட் அல்ல. வேஸ்டே எங்கள் மூலதனம் என்றுசெயல்படும் மில்களே ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் (ஒ.இ).சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒ.இ மில்கள் தற்போதுகடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.



நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை மூலப்பொருளாகக் கொண்டு கிரே மற்றும் கலர் நூல்கள் உற்பத்தி செய்து வரும் இந்த மில்கள் சந்தித்து வரும் சவால்களை இந்த சிறப்பு தொகுப்பில் பார்ப்போம்.

ஒ.இ மில்கள் என்றால் என்ன ?

ஜவுளி தொழிலில் பின்னலாடை தயாரிப்பு தொழில் கூடங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் கூடங்கள், நூற்பாலைகள் போன்றவற்றில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சுகளை மூலதனமாக கொண்டு கடைநிலை நூல் தயாரிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன இந்தஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள்.



நூற்பாலைகளின் நூல் தயாரிப்பில் கழியும் கழிவு பஞ்சு, அதாவது "கோம்பர் காட்டன்" தான் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களுக்கான மூலப்பொருள்.நூற்பாலை பஞ்சு கழிவு மட்டுமின்றி பின்னலாடை, ஆயத்த ஆடை கட்டிங் வேஸ்ட் கழிவுகள் மூலம் கலர் மற்றும் கிரே நூல்,விஸ்கோஸ், ரயான், பாலியெஸ்டர் உள்ளிட்ட நூல்கள்தயாரிக்கப்படுகின்றன.

ஒரு ஆண்டு ரூபாய் 20 ஆயிரம் கோடி வர்த்தகம் ஈட்டும்இந்த ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், தற்போதுகடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக ஒ.இ மில் அமைப்பின் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்,

ஓ.இ மில்களில் தயாரிக்கப்படும் கலர் மற்றும் கிரே காட்டன் நூல்கள் பல துறைகளுக்கான மூலப்பொருளாக இருக்கின்றன. நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிக்கும் பண தாள்தயாரிக்க இவை பயன்படுகின்றது. பணத்தாள் மட்டுமின்றி மருத்துவ துறையில் மெடிக்கல் பேண்டேஜ், காயம் கட்டு துணி, குழந்தைகளுக்கான டயப்பர் போன்றவை தயாரிக்க இவை பயன்படுகின்றன.

அது மட்டுமின்றி வீட்டுக்கு தேவையான மேசை விரிப்பு, கால் விரிப்பு, தரை மேட் உள்ளிட்டவையும் பெட்சீட், பெர்முடாஸ், டி -சர்ட்டுகள், மிதியடி, தலையணை, தரை துடைப்பான், தரைவிரிப்பு போன்ற பொருட்களை தயாரிக்க கலர் மற்றும் கிரே காட்டன் நூல்களேஉதவுகின்றன.



பழைய துணிகளை மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து நூலாக மாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாக ஓ.இ.மில்கள் உள்ளது என்றால் அது மிகையாகாது.




உச்சத்தில் கோம்பர் காட்டன் விலை..! உச்சக்கட்ட நெருக்கடியில் ஓ இ மில்கள்..!

அத்தியாவசிய பொருள் முதல் அலங்கார பொருள் வரை தயாரிக்க பயன்படும் கோம்பர் காட்டன் விலை மளமளவென உயர்ந்துள்ளது, ஓ. இ மில்களுக்கு பெரும்.நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற ஆண்டு கழிவு பஞ்சின் விலை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு கிலோ கோம்பர் காட்டன் கழிவு பஞ்சு 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒப்பீடு அளவில், முந்தைய ஆண்டை விட ஒரே ஆண்டில் 70% விலை உயர்வு என்றே சொல்ல வேண்டும். புது உச்சம் தொட்டுள்ள கோம்பர் காட்டன் விலையால், ஓ.இ மில்கள் உச்சகட்ட நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

கட்டட வாடகை, மின் கட்டன உயர்வு, சம்பள உயர்வு, போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பு, இயந்திர உதிரி பாகங்கள் விலை உயர்வு அதிகரிப்பினால் கடும் நெருக்கடியில் ஒ.இ மில்கள் தத்தளித்து வரும்.நிலையில், தற்போது மூலப்பொருள் உயர்வால் மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிப்பு

மூலப்பொருளான கோம்பர் காட்டன் விலை உயர்வால், அதன் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். விலை உயர்வால், நுகர்வோர்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

விலை ஏற்றத்தை தடுக்கவும், ஏற்றுமதியை தடை செய்யவும் கோரிக்கை.

அத்தியாவசிய தயாரிப்பு முதல் ஆடம்பர தயாரிப்புகள் வரை பல்வேறு பொருட்களை தயாரிக்க பயன்படும், கேம்பர் காட்டன் கழிவு பஞ்சின் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை வலுத்துள்ளது.அதே போல,  உள்நாட்டில் இயங்குகின்ற தொழில் கூடங்களுக்கு கோம்பர் காட்டன்  தட்டுப்பாடு இருக்கின்ற நிலையில், வெளிநாடுகளுக்கு வரியின்றி, தங்கு தடையின்றி அவை ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது. 

இங்கிருந்து மூலப்பொருட்கள் ஏற்றமதி செய்யபட்டு, பலவேறு பொருட்களாக தயாரிக்கப்பட்டு மீண்டும் இந்திய சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. 

இதற்கு மாறாக, இந்திய மூலப்பொருட்களை கொண்டு இந்தியாவிலேயே பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தினால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தர முடியும்.

அதேபோல, இங்கே பொருட்களை தயாரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பும், தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியும் அதிகம் கிடைக்கும்.

15 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை.

கழிவு பஞ்சை ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வரும் நிலையில், குறைந்தபட்சம் ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும் என ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.. 

20 ஆண்டுகாலம் தமிழ்நாடு அரசாங்கத்திடம் விற்பனை வரியை நீக்க கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் வரியை நீக்கியுள்ளார். 

15 வருடங்களாக மத்திய அரசாங்கத்திடம் முறையிட்ட  கோரிக்கைகளுக்கு இதுவரை பதில் இல்லை என்பதும் இவர்களின் ஆதங்கம். 

இந்திய சந்தையை காட்டிலும் இந்தியாவுக்கு போட்டி நாடான பங்களாதேசில் கழிவு பஞ்சின் விலை குறைவாக விற்பதால்,  ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் அமைப்பினர் பங்களாதேஸிலிருந்து மூலப்பொருளான கழிவு பஞ்சை றக்குமதி செய்யவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும்,, ஆண்டுக்கு இருபது ஆயிரம் கோடி வர்தகமும் கொண்ட இந்த கழிவு பஞ்சை கொண்டு இயங்கும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் தொழில் சந்தித்து வரும் நெருக்கடியிலிருந்து மீட்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்முனைவோர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மூலப்பொருட்கள் விலை உயர்வை தடுக்க அரசாங்கங்கள் தவறினால், டெக்ஸ்டைல் தயாரிப்புகளின் விலை உயரும், கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் தடைப்படும் நிலை உருவாகும் என்பதே எதார்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...