வெள்ளலூர் பேருந்து நிலையம்: எஸ்.பி வேலுமணி மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து ரூ.100 கோடி ஊழல் - லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐஜி மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு தனி நபர் புகார்...!

அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணியின் சகாக்களின் ரியல் எஸ்டேட் நிலங்களின் மதிப்பை உயர்த்தவே வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.


கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டரில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முந்தைய அதிமுக ஆட்சியாளர்களால் தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க உகந்த இடம் இல்லை என்றும் முறையான திட்டமிடல் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணி முடிவடையுமா..? பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா..? என்ற கேள்வி எழுந்திருக்கின்றன.

இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று அதிமுக தரப்பில் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரும் சர்ச்சையான வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டமே முன்னாள் ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்திருக்கின்றன.



இந்நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டர் குறித்து ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐஜி மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.



அந்த புகாரில், 65 ஏக்கர் பரப்பளவில் 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேஸ்கோஸ் ரகுநாத், வெள்ளலூர் பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்ட பொழுது அது ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் இல்லை என்று மத்திய அரசாங்கம் புறம் தள்ளியது.

ஆனால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வெள்ளலூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட்டுக்காக நிலங்களை வாங்கி இருப்பதால், அதற்கான மதிப்பு கூட்டும் விதமாக வெள்ளலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது

இந்த நிலையில், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான டெண்டரும் எஸ்.பி.வேலுமணியின் சகாக்களுக்கு விடப்பட்டது. 20 சதவீத பணிகளே முடிந்திருக்கின்ற நிலையில், 40 சதவிகித பணிகளுக்கான நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் 100 கோடி ரூபாய் அளவில் கொள்ளை அடித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்.

மாநகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் புறநகரான வெள்ளலூருக்கு பயணித்து பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாது. வெள்ளலூரில் அமைந்திருக்கின்ற குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதனால், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை.

இவ்வாறு ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகாரில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...