கோவையில் கதவின்றி கட்டப்பட்ட மாநகராட்சி பொது கழிவறை - முகம் சுழித்த பொதுமக்கள் : விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

இருவர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவறையின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.



கோவை: கோவை அம்மன்குளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி கழிவறை கட்டுமானம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அம்மன் குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாதது ஏன்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், இருவர் அடுத்தடுத்து அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவறை குழந்தைகளுக்காக கட்டப்பட்டது என்றாலும் கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரே அறையில் இரு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் வலைதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...