முதல்வர் மற்றும் அவரது குடும்பம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு - கோவை அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பிய கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவரான சுப்பிரமணி என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: சமூக வலைத்தளங்களில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சுப்பிரமணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பியதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து நேற்று அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்ற போலீசார், சுப்பிரமணியத்தை மாவட்ட சைபர் கிரைம்அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவதூறு கருத்துகளை பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை அவர் மீது 153A(1)(a), 504, 505(2), 67 IT Act 2000 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தள அவதூறு கருத்து பதிவிற்காக அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...