உரிய அனுமதி பெறாமல், பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த 2 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சீல் - டேக்ட் அமைப்பு கண்டனம்

கோவை மாநகராட்சி நிர்வாகம் 2 நிறுவனங்களுக்கு சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள டேக்ட் அமைப்பு, முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை: கோவையில் உரிமம் பெறாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வந்த 2 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்ததற்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் வருவாய்துறை ஊழியர் கனகாசலம் என்பவர் கோவை மாநகராட்சியில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கோவை மாவட்டம் டி.வி.எஸ் நகர் பகுதியில் இயங்கி வரும் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் பிரபு என்பவருக்கு சொந்தமான ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 தொழிற்சாலைகள் முறையான அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். பின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2 நிறுவனங்களையும் மூட வேண்டும் என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.



இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், புகாரில் குறிப்பிடப்பட்ட கங்கா ஹாஸ்பிட்டாஸ் மற்றும் ஹரி இஞ்சினியரிங் ஆகிய 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்தனர்.

இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 நிறுவனங்களையும் மூடி சீல் வைத்த அதிகாரிகள் முகாந்திரமற்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், புகார் அளித்துள்ள நபரின் வீட்டுக்கும் தொழில் கூடம் அமைந்திருக்கின்ற இடத்துக்கும் 700 மீட்டர் தொலைவு இருக்கும் போது, தொழில் கூடத்தின் மாசு எப்படி அவர் வீட்டை பாதிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு என்ற பெயரில் கட்டிடத்தின் உரிமையாளரை பழி வாங்கும் நோக்கில், கனகாசலம் தந்த முகாந்திரமற்ற புகாரின் அடிப்படையில் இரண்டு தொழில் கூடங்கள் பலியானதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...