கோவை தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் பல லட்சம் பணத்தை களவாடிய ரிசப்சனிஸ்ட் தலைமறைவு...!

கோவிட் காலகட்டத்தில், சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஒன் கேர் மருத்துவமனையில், 40 லட்சம் ரூபாய் வரை கணக்கில் காட்டாமல், மோசடி செய்து தலைமறைவான பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் "ஒன் கேர்" என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கோவிட் பெருந்தொற்றின் போது, நோயாளிகளால் நிரம்பி வழிந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.

சமீபத்தில், இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அடங்கிய குழு நோயாளிகளின் பதிவு மற்றும் வரவு செலவு கணக்கினை சரி பார்த்துள்ளனர். அப்போது, நோயாளிகளின் பெயர் கணினியில் பதிவேற்றம் செய்த நிலையில், சிலர் செலுத்திய மருத்துவ கட்டணம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அப்போது அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பணியில் இருந்த லதா என்ற ரிசப்சனிஸ்ட் பெண்ணை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, லதா தனியாக ட்ராவில் வைத்திருந்த பணத்தை கொண்டுவந்து தந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக, மருத்துவமனையின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, தணிக்கையில் ஈடுபட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் வரவு செலவு கணக்கினை பார்த்து திகைத்து நின்றிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 அக்டோபர் மாதம் வரை கோவிட் காலத்தில் ரூபாய். 40 லட்சம் கணக்கில் வராததை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து லதா மற்றும் சக ரிசப்சனிஸ்டுகளை விசாரித்த போது, இதில், லதா என்ற பெண் ரிசப்சனிஸ்ட் கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும், இரண்டு வருடங்களாக பெரும்பாலும் இரவு பணிக்கு லதா வந்துள்ளார் என்பதும் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகள் பெயரை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டு, பின்னர் சிகிச்சை முடித்துவிட்டு வரும் நிலையில் நோயாளிகள் செலுத்தும் மருத்துவ கட்டணத்தை, வரவு செலவு கணக்கில் காட்டாமல் தனியாக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பணி முடிந்து வீட்டுக்கு புறப்படும் போது, அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், உள் நோயாளிகளாக அனுமதிக்கபட்டுள்ள நபர்களிடம், மருத்துவ கட்டணத்தை கையாடல் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த ரிசப்சனிஸ்ட் லதா, ஒ பி என்று சொல்லப்படும் வெளி நோயாளிகளின் மருத்துவ கட்டணத்தை நூதன முறையில் கொள்ளையடித்திருக்கின்றார்.

மேலும், அவர் பையில் அதிக பணத்தை வைத்திருப்பதைப் பார்த்து யாராவது கேட்டால், அது சொந்த பணம் என்று பல்வேறு காரணங்களை கூறி வந்துள்ளார். இது மட்டுமின்றி தொடர்ந்து இரவு பணிக்கே முக்கியத்துவம் தந்து வேலைக்கு வந்த லதா, கொள்ளையடிக்க இடையூறாக இருக்கும் சக இரவு நேர ரிசப்சனிஸ்டுகளை வசைபாடி பணியில் இருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

பகல் நேரத்தில் கேஷியர், மருத்துவமனை மூத்த நிர்வாகிகள், மூத்த மருத்துவர்கள் இருப்பதனால் பணத்தை கொள்ளையடிக்க நெருக்கடி ஏற்படும் என்பதனால் இரவு நேர பணியையை விரும்பி கேட்டு வந்து பணத்தை கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து, ஒன் கேர் மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் ரிசப்சனிஸ்ட் லதா மீது ரூபாய் 40 லட்சம் கையாடல் செய்ததாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் 406, 420 உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தலைமறைவான லதாவை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த நூதன மோசடி தொடர்பாக பல நபர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...